கொரோனா 3.0 இந்தியாவில் அடுத்த உருமாறும் கொரோனா??

செவ்வாய், 15 ஜூன் 2021 (15:41 IST)
கடந்தாண்டு சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவிய கொரொனா தொற்று படிப்படியாக குறைத நிலையில் இந்த ஆண்டு கொரொனா உருமாறி இரண்டாம் அலையாக பரவியது.

இந்த இரண்டம் அலை தற்போது குறையும் நிலையில் இந்த 2 வது அலைக்கு முக்கிய காரணம் எனக் கூறாப்படும் டெல்டா வகை கொரொனா வைரஸ்தான் உருமாறி புதிய டெல்டா வகையாக தோன்றியுள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த டெல்டா வகை அதிகமாகப் பரவும் எனவும், சர்ஸ் கொரொனா வைரஸ் 2 ஆக உருமாறி டெல்டா பிளஸ் ஆக மாறியுள்ளதாகவும் இந்த வகை வைரஸ்கள் இந்தியாவில் குறைவாக உள்ளதால் மக்கள் பயப்படத் தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்