டெல்டா, பீட்டா மரபணு மாற்ற வைரசுகளையே ஒரு கைப்பார்க்கும் கோவேக்சின்

புதன், 9 ஜூன் 2021 (15:59 IST)
டெல்டா, பீட்டா மரபணு மாற்ற வைரசுகளிடம் இருந்து கோவேக்சின் பாதுகாப்பு அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்கள் முன்னதாக அதிகபட்சமாக தினசரி பாதிப்புகள் 4 லட்சத்தை தாண்டிய நிலையில் தற்போது 2 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலை பாதிப்பை விட இரண்டாம் அலையில் பாதிப்புகள், பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் பாதிப்புகள் அதிகரித்ததத்ற்கு வீரியமிக்க டெல்டா வகை கொரோனா தொற்றே காரணம் என மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் தெரிய வந்ததாக தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், டெல்டா, பீட்டா மரபணு மாற்ற வைரசுகளிடம் இருந்து கோவேக்சின் பாதுகாப்பு அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக், புனே தேசிய வைராலஜி கழகம் ஆய்வு செய்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்