கொரோனா முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பையும், அதிக பலியையும் ஏற்படுத்தி உள்ளது. 2வது அலையே இப்போது தான் கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் 3வது அலையை விரைவில் எதிர்ப்பார்க்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு வருகிறது.
ஆனால், இந்தியாவிலோ அல்லது சர்வதேச அளவிலோ கொரோனாவின் அடுத்த அலையில் குழந்தைகளே தீவிரமாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என எய்ம்ஸ் இயக்குநர் இது குறித்த அச்சத்தை போக்கியுள்ளார்.