தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசை கண்டித்து, கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிதிப் பங்களிப்பை உரிய நேரத்தில் விடுவிப்பதில்லை என்று தமிழக அரசு குற்றம் சாட்டி வருகின்றது. குறிப்பாக, கல்வி திட்டங்களுக்காகத் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி ஒதுக்கீடு வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுவதாக சசிகாந்த் செந்தில் தனது போராட்டத்தில் தெரிவித்தார்.
சசிகாந்த் செந்திலின் போராட்டத்தை, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அறிவுறுத்தினார். காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், சசிகாந்த் செந்திலின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.