பாண்டிச்சேரியில் ஆளும் கட்சி எம்.எல்.ஏவாக உள்ள சந்திரபிரியங்காவிற்கு சொந்த கட்சி அமைச்சர் ஒருவரே டார்ச்சர் தருவதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரசுகாவின் மகள் சந்திரபிரியங்கா. என்.ஆர்.காங்கிரஸில் இருந்து வரும் இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் நெடுங்காடு தொகுதியில் நின்று வெற்றிப் பெற்றார். அவருக்கு ஆரம்பத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு திடீரென அவரது பதவி பறிக்கப்பட்டது.
தற்போது எம்.எல்.ஏவாக தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வரும் சந்திரபிரியங்கா தற்பொது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போதைய ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் தன்னை தொடர்ந்து டார்கெட் செய்து பல பிரச்சினைகளை உண்டு பண்ணி வருவதாகவும், தான் செல்லும் இடமெல்லாம் ஆள் வைத்து கண்காணிப்பது, செல்போன் பேச்சை ஒட்டுக்கேட்பது உள்ளிட்ட வேலைகளை செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் அந்த அமைச்சர் யார் என்பதை அவர் சொல்லவில்லை. மேலும், ஒரு முன்னாள் அமைச்சர், ஆளும் கட்சி எம்.எல்.ஏவான எனக்கே இப்படி ஒரு நிலைமை என்றால், ஏழை மக்களை இவர்கள் என்ன செய்ய மாட்டார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.
Edit by Prasanth.K