நன்றிகெட்ட விடுதலைப்புலிகள், தேசத்துரோகி சீமான்: காங்கிரஸ் ஆவேசம்

ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (18:35 IST)
சமீபத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தியது போல் ஒருசில கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கடும் கண்டன்ம தெரிவித்ததோடு, சீமான் மீது தேசத்துரோக குற்றத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மேலும் கூறியதாவது: 
 
ராஜிவ்காந்தி படுகொலையை நியாயப்படுத்தி, வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமானை தேசத்துரோக குற்றத்தின் அடிப்படையில் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
அன்று விடுதலை புலிகளால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போதும், தொடர்ந்து 1991 தேர்தல் நடைபெற்ற போதும் ஓட்டுமொத்த தமிழ் சமுதாயம் வெளிபடுத்திய அனுதாபத்தையும் காங்கிரசுக்கு வழங்கிய ஆதரவையும் அரசியல் கோமாளி சீமான் அறிய வாய்ப்பில்லை.
 
நன்றிகெட்ட விடுதலை புலிகளின் துரோகத்தை மறைக்கும் சீமானை விட தேசத்துரோகி எவரும் இருக்க முடியாது. பயங்கரவாதி பிரபாகரனின் சதி திட்டத்தால் பலியாக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் உயிர்தியாகத்தை பகிரங்கமாக கொச்சைபடுத்தும் கொடூரன் சீமானை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
 
பெற்று தந்தவர் ராஜீவ்காந்தி. இலங்கை தமிழர்களை பாதுகாக்க  இந்திய அமைதி காக்கும் படையை அனுப்பியவர் ராஜிவ்காந்தி. இலங்கை தமிழர்களுக்கு பாதுக்காப்பு வழங்கிய இந்திய அமைதி காக்கும் படையை சேர்ந்த 2000 இந்திய வீரர்களை இலங்கை மண்ணில் கோழைத்தனமாக கொன்று குவித்தவர்கள்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்