வாய்விட்டு வம்பில் மாட்டிய சீமான்: மீண்டும் கைதா??

திங்கள், 14 அக்டோபர் 2019 (09:21 IST)
ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம்தமிழர் கட்சி சீமான் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அவர் பேசியதாவது, நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும் என பேசினார்.
 
சீமானின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் சூழ்நிலையில் கடுமையான அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. சீமானைத் தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் அங்கிகாரததை நீக்க வேண்டும் எனவும் கூறி தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டார். 
 
இதனை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம்தமிழர் கட்சி சீமான் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்