கோவில் பூசாரிகள் எல்லாம் ரேப்பிஸ்ட்: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்., எம்எல்ஏ கைது..!

புதன், 8 நவம்பர் 2023 (17:50 IST)
கோவில் பூசாரிகள் எல்லாம் ரேப்பிஸ்ட் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  அசாம் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
அசாம் மாநிலத்தில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்  காங்கிரஸ் எம்எல்ஏ  அஃப்தாப் உதீன் மொல்லா என்பவர் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசினார். 
 
அப்போது இந்துக்கள் இருக்கும் இடத்தில் தவறுகள் நடக்கும் என்றும் கோவில் பூசாரிகள்  மற்றும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாவலர்கள் ரேப்பிஸ்ட் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். 
 
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து எம்எல்ஏ அஃப்தாப் உதீன் மொல்லாவுக்கு  கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனை அடுத்து அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கூறிய போதிலும் அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.  
 
குறிப்பிட்ட மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்