7000 பேர்களை பணிநீக்கம் செய்ய பிரபல நிறுவனம் முடிவு: அதிர்ச்சியில் பணியாளர்கள்!

வியாழன், 31 அக்டோபர் 2019 (20:01 IST)
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் சென்னை, பெங்களூரு, மும்பை உள்பட பல நகரங்களில் கிளைகள் அமைத்து இயங்கிவரும் காக்னிசன்ட் என்ற நிறுவனம் 7 ஆயிரம் பேர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்து இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் செலவினங்களை குறைக்கும் வகையில் 12 ஆயிரம் பணியாளர்களை வெளியேற்ற முடிவு செய்திருப்பதாகவும் அதில் 5000 பேருக்கு பயிற்சி அளித்து மீண்டும் பணியமர்த்த முடிவு செய்துள்ளதாகவும் மீதி உள்ள 7 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வெளிவந்துள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் இந்தியர்கள் பணிபுரிவதால் இந்தப் பணிநீக்க பட்டியலில் இந்தியர்களின் பெயர்கள் அதிகம் இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக சென்னை மற்றும் பெங்களூரில் பணி புரியும் இந்நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த மூத்த பணியாளர்கள் பலர் வேலை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது, இருப்பினும் வேலை இழப்போர்கள் குறித்த பட்டியலை இந்த நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இது குறித்து இந்நிறுவனத்தின் சிஇஓ ப்ரையன் ஹம்ப்ரைஸ் அவர்கள் கூறியபோது ’உலகம் முழுவதிலும் இருந்து 10 முதல் 12 ஆயிரம் வரையிலான மூத்த பணியாளர்கள் நீக்கப்பட்டு வரும் நிலையில் எங்கள் நிறுவனத்தில் இதே போன்ற ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் சுமார் 5,000 முதல் 7,000 பணியாளர்கள் வரை வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்