உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

Mahendran

சனி, 22 மார்ச் 2025 (19:04 IST)
உக்ரைன் - ரஷ்யா  போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பாக, லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
 
ஜனவரி மாதத்தில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஏழு வாரங்கள் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதை நீட்டிக்கும் முயற்சிகள் வெற்றியடையவில்லை. இதனிடையே, இஸ்ரேல் காசாவில் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதலை மேலும் அதிகரிக்க உள்ளதாகவும், தேவையான பதிலடி வழங்கப்படும் என்றும் இஸ்ரேல் அறிவித்தது.
 
இதையடுத்து, லெபனானில் இருந்து இஸ்ரேலின் மெடுலா நகரை நோக்கி ராக்கெட் ஏவப்பட்டது. இந்த தாக்குதலை வானிலேயே வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. அதே நேரத்தில், இதற்கு கடுமையான பதிலடி வழங்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தது.
 
இதுவரை, இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல்களில் 4,000க்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 60,000க்கும் அதிகமான இஸ்ரேல் குடிமக்கள் பாதுகாப்புக்காக இடம்பெயர்ந்துள்ளனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்