’ஜியோ’ கதறல் : ஏர்டெல், வோடபோனுக்கு மட்டும் சலுகை ! எனக்கில்லையா ?

வியாழன், 31 அக்டோபர் 2019 (18:55 IST)
நாட்டில் முன்னணி தொலைத்தொடர்பு நெட்வொர்க் நிறுவனம் ஜியோ. முகேஷ் அம்பானியின் அதிரடி அறிவிப்புகளால் இந்தியாவே டிஜிட்டல் இந்தியாவாக 2016 ஆம் ஆண்டு மாற்றம் கண்டது. 
இந்நிலையில்,  ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை  காட்டும் சிஐஏ அமைப்புக்கு எதிராக தற்போது ஜியோ நிறுவனம் மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள முகேஷ் அம்பானிக்கு மத்திய அமைச்சகம் மற்றும் உலக பெரும் நிறுவனங்களின் அதன் போக்குகள் அத்துணையும் அத்துப்படி. ஆயினும் அவரது தந்தை வியாபார சக்கரவர்த்தியிடம் இருந்து கற்ற தந்திரம் மற்றும் நுட்பம், புத்திசாலித்தம் ஆகியவற்றுடன் தன் தந்தை திருபாய் அம்பானி கொடுத்த மிகப்பெரிய ரிலையன்ஸ் குரூப்ஸ் ஆப் கம்பெனியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வெற்றிகரமான பிசினஸ் மேனாக நடைபோட்டு, தனிரக பிளைட்டில் உலகைச்  சுற்றி வருகிறார். 
 
ஆனால், அவரது தம்பி, அனில் அம்பானி தொழில் செய்வதில் வியாபாரத்தில் தோற்று விட்டார். ஆனால் கடைசி நேரத்தில் தம்பிக்கு பல  நூறுகோடிகள் கொடுத்துக் காப்பாற்றினார். ஆனால் அனில் அம்பானி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அந்தப்பணம் எல்லாம் உரிய முறையில் சென்றதாகத் தெரியவில்லை.
 
இந்நிலையில் அவரது நிறுவனத்துக்கு லாபம் வரும்போது எதுவும் வெளியில் தெரிவதில்லை. ஆனால் தன் ஜியோ நிறுவனம் நட்டத்தில் போனதனால்தான் ஒரு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 
இந்நிலையில் ஜியோவுக்கு போட்டியான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் சிஓஏஐ சலுகை காட்டி ஆதவளித்துள்ளது என ஜியோ நிறுவனம் மத்திய அரசிடம் புகார் கூறியுள்ளதை பற்றி பார்ப்போம்.
 
அதில், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் சிஓஏஐ சலுகை காட்டி ஆதவளித்து வருவதால் தனது ஜியோ நிறுவனம் கடுமையாகப் பாதிக்கும், என தெரிவித்துள்ளது.
ஜியோ நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இரு டிஜிட்டகளில் கோடிகளில் போய்க்கொண்டிருந்தபோது மேலும் மேலும் இலவச அழைப்புகளை கொடுத்த நிலையில் சமீபத்தில் 6 பைசா நிமிடத்திக்கு என ஜியோ நிறுவனம் கூறியதில்  மற்ற நிறுவனங்கள் மற்றும் போட்டி நிறுவங்களுக்கு அதிர்ச்சி இல்லை. அதன் வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே அதிர்ச்சி. காரணம் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணம் மற்றும் அவற்றில் சில லாபம், வரிகள் ஆகியவற்றிற்குப் போனது போக தங்கள் தரத்தை அதே அளவில் வைக்க முயன்றிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
 
ஆனால் திடீரென்று கால்கள் இலவசம் என ஜியோ என்ற ஒரு நிறுவனம் அறிவித்ததும்  மக்கள் கண்ணை மூடிக்கொண்டு அதற்குத் தாவினர். ஆனால்  இலவசமாக கால்கள், நெட்டுகள் சலுகை  கிடைத்தாலும், கிராமங்கள், சில இடங்கள் சரியாக நெட்வொர்க் கிடைக்கவில்லை என்பது உண்மை.
 
அப்படி ஒரே அடியாய் இந்திய தொலைத்தொடர்பு துறையை தன் வசமாக்கிய ஜியோ இன்று வாரி இறைத்த இலவசத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய முயல்கிறது.
இந்நிலையில் அது நிமிடத்துக்கு 6 பைசா கேட்க மற்ற நிறுவனங்கள் தங்கள் தந்திர வேலையைக் காட்டி வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டுள்ளது.
 
இந்தப் போட்டியில் இப்போது ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் மீது ஜியோ மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்