சமீபத்தில், ஹோல்மென் சாட்ஜிபிடியிடம் தன்னை பற்றிய தகவல்களை கேட்டுள்ளார். அதற்குப் பதிலாக, "அவர் தனது குழந்தைகளை கொலை செய்த குற்றத்திற்காக 21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்" என்று சாட்ஜிபிடி பொய்யான தகவல் வழங்கியுள்ளது. உண்மையில், இந்த தகவலில் எதுவும் உண்மை இல்லை. இதைக் கேட்ட ஹோல்மென் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து, நொய்ப் என்ற டிஜிட்டல் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் உதவியுடன், அவர் ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார். இந்த தவறான தகவல் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் என்ற நியாயமான காரணத்தினால், ஓபன் ஏஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஓபன் ஏஐ தனது விளக்கத்தை வெளியிட்டுள்ளது. "சாட்ஜிபிடியின் பழைய பதிப்பில் இந்த பிழை ஏற்பட்டது. எங்கள் மாடல்களை தொடர்ந்து மேம்படுத்தி, தவறுகளை சரிசெய்ய முயற்சி செய்கிறோம்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.