முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் - பாஜகவினர் போராட்டம்! அரசியலில் பரபரப்பு

செவ்வாய், 9 ஜூலை 2019 (18:02 IST)
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான  மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் காங்கிரஸின் 13  எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யப்போவதாக கூறி கடந்த சில தினங்களாக மும்மையில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கர்நாடாக அரசியலில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
இந்ந்நிலையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த குமாரசாமி, இந்த அரசியல் பரபரப்பு இடையில் பாதியிலேயே தன் பயணத்தை முடித்துக்கொண்டு மும்பைக்குத் திரும்பினார்.
 
இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று கூறி, பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தற்போது முதல்வர் குமாரசாமியின் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யபோவதாக கூறிவரும் நிலையில், அவர்கள் ராஜினாமா செய்தால் குமாரசாமி ஆட்சி கவிழும் நிலை ஏற்படும்.
 
இப்படியிருக்க நேற்று ஒரே நாளில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த   21 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும் தங்களது மந்திரி பதவிகளை நேற்று ஒரே நாளில் ராஜினாமா செய்தனர்.
 
இதனையடுத்து 14 எம் எல் ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், குமாரசாமி பெஉம்பான்மை பலத்தை இழந்து முதல்வர் பதவியை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
 
இதனால் பெரும்பான்மையை இழந்துவிட்ட குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேம்ண்டும் என்று கோரி கர்நாடக பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். அதனையடுத்து இன்று அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்