12 எம்.எல்..ஏக்கள் ராஜினாமா ? கர்நாடக அரசியலில் பரபரப்பு

சனி, 6 ஜூலை 2019 (14:01 IST)
சட்டப்பேரவையில்  சபாநாயகர் ரமேஷ் குமார் இல்லாத நிலையில் 12 எம்.எல்.ஏக்களுகளும் வருகை தந்துள்ளனர் இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனநாயகம் கட்சி ஆகிய கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வருக்கு எதிர்கட்சிகள் தரப்பிலிருந்து இவருக்கு அதிகப்படியான நெருக்கடிகள் வலுத்துவந்தன.
 
இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்  இரண்டு பேர் ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில் குமாரசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
 
இதனைத்தொடர்ந்து , சபாநாயகரை சந்திக்க 9  காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், ரமேஷ்  ஜார்கிஹோலி, விஸ்வநாத், பிரதாப் கவுடா உள்ளிட்ட 3 மதச்சார்பற்ற ஜனதாதளம் எம்.எல்.ஏக்களும் தலைமைச்செயலகம் வந்துள்ளனர்.
 
இந்நிலையில் அவசர கூட்டத்துக்கு அம்மாநில துணைமுதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ள அம்மாநில முதல்வர் நாளை மறுநாள் திரும்ப் உள்ள நிலையில் கர்நாடகாவில் அரசியல் குளப்பம் அதிகரித்துள்ளது.
 
ஓருவேளை இந்த 12 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தால், பாஜக அதிக பெரும்பான்மை பெரும் சூழல் உருவாகியுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்