அந்த வீடியோ என்னிடம் உள்ளது - அதிருப்தி எம்.எல்.ஏக்களை மிரட்டும் குமாரசாமி

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (14:41 IST)
கட்சி தாவ நினைக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்களை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஒரு ஆடியோ ஆதாரத்தை வைத்து மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில முதல்வராக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வரரும் உள்ளார். 
 
கூட்டணி கட்சிகளுக்கு இடையே உள்ள உட்பூசலை காரணமாக வைத்து ஆட்சியை கலைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது.  மேலும் எடியூரப்பா அதிருப்தி எம்.எல்.ஏ க்களுக்கு போன் செய்து கட்சி தாவ 30 கோடி ரூபாய் குதிரை பேரம் பேசியதாகவும் கூறப்பட்டுகிறது.
 
இந்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி, அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம், நீங்கள் ஒரு வேலை கட்சி தாவினால், நீங்கள் பாஜகவினரிடம் குதிரை பேரம் பேசிய ஆடியோ - வீடியோவை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் ஆட்டம்கண்டு போன அதிருப்தி எம்.எல்.ஏக்கள், நீங்கள் சொன்ன பேச்சையே கேட்கிறோம் என குமாரசாமியிடம் சரண்டர் தகவல் வெளியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்