கர்நாடக அமைச்சரவையில் இன்னும் ஆறு இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த ஆறு துறைகளுக்கு அமைச்சர் நியமன நடவடிக்கையில் கடந்த சில வாரங்களாக முதல்வர் குமாரசாமி ஈடுபட்டு வந்தாலும் அவரால் இறுதி முடிவை எடுக்க முடியவில்லை. சுமார் 25 எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி கட்டாயம் வேண்டும் என முட்டி மோதி வருவதால் யாரை அமைச்சராக்குவது யாரை சமாதானம் செய்வது என்று முதல்வர் குமாரசாமியால் முடியவில்லை.
இதனால் அமைச்சர் விரிவாக்கம் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் அதிருப்தி காரணமாக பாஜகவுடன் கைகோர்க்க வாய்ப்பு உள்ளதால் முதல்வர் குமாரசாமி அச்சம் அடைந்திருப்பதாகவும், ஆட்சியை முடிந்தவரை காப்பாற்றி கொள்ள அமைச்சரவை விரிவாக்கத்தை அவர் ஒத்தி வைத்துள்ளதாகவும் தெரிகிறது.