இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து, தேர்தல் நடத்தும் தேதி குறித்து ஆலோசனை செய்தோம். அனைத்து கட்சிகளும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளை கருத்தில் கொண்டு, இப்பண்டிகைகள் முடிந்த பிறகு தேர்தலை நடத்துமாறு எங்களிடம் கேட்டுக் கொண்டனர். எனவே, தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் மகாராஷ்டிரா மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.
மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் வாக்களிப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனை உயர்த்துவதற்காக மக்களிடம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.