குண்டு வைத்த மாவோயிஸ்ட்! 11 பேர் உடல் சிதறி பலி! – சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்!

வியாழன், 27 ஏப்ரல் 2023 (08:29 IST)
சத்தீஸ்கரில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளை பிடிக்க சென்ற போலீஸார் குண்டு வெடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களான சத்தீஸ்கர், ஒடிசா பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள நிலையில் அவர்களை பிடிக்க அம்மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பாஸ்டர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக சத்தீஸ்கர் போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து ரோந்து படை ஒன்று அவர்களை பிடிக்க சென்றபோது மாவோயிஸ்டுகள் வைத்த குண்டு வெடித்து ரோந்து சென்ற 10 போலீஸார் உட்பட 11 பேர் உடல் சிதறி பலியானார்கள். இந்த கோர சம்பவம் சத்தீஸ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்