திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டருக்குள் வெடிகுண்டு.. மணமகன் பலி: மணப்பெண்ணின் முன்னாள் காதலன் கைது

புதன், 5 ஏப்ரல் 2023 (13:33 IST)
திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டருக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டதை அடுத்து அந்த வெடிகுண்டு வெடித்ததில் மணமகன் உள்ளிட்ட இரண்டு பேர் பலியாகினார். இந்த சம்பவத்தில் மணப்பெண்ணின் முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் இதில் ஒருவர் ஹோம் தியேட்டர் திருமண பரிசாக மணப்பெண்ணுக்கு கொடுத்தார். அந்த ஹோம் தியேட்டர் திடீரென வெடித்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
 இந்த சம்பவத்தில் மணமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இந்த ஹோம் தியேட்டரை கொடுத்தது மணப்பெண்ணின் முன்னாள் காதலன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
தன்னை தனது காதலி ஏமாற்றி விட்டதால் அவரை கொலை செய்வதற்காக ஹோம் தியேட்டர் அமைப்புக்குள் வெடிகுண்டு வைத்து சதி வேலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்