குண்டு வெடிப்புக் காட்சியை படமாக்கிய போது சஞ்சய் தத் காயம்… மருத்துவமனையில் அனுமதி!

வியாழன், 13 ஏப்ரல் 2023 (08:30 IST)
பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் குண்டுவெடிப்பு வழக்கில் சிறை சென்று வந்த பின்னர் பாலிவுட் படங்களில் மட்டும் இல்லாமல், மற்ற மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் ஏற்று நடித்த அதிரா கதாபாத்திரம் அவருக்கு தென்னிந்திய சினிமாவிலும் பிரபலத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் படத்தில் தனது காட்சிகளில் நடிப்பதற்காக நடிகர் சஞ்சய் தத், காஷ்மீருக்கு சென்று படப்பிடிப்புக் குழுவோடு இணைந்து முதல் கட்ட ஷூட்டிங்கை முடித்தார்.

இந்நிலையில் இப்போது வேறொரு படத்துக்காக மும்பையில் நடந்த ஒரு ஷூட்டிங்கின் போது அவர் காயமடைந்துள்ளார். குண்டு வெடிப்புக் காட்சியை படக்குழுவினர் படமாக்கும் போது, உடைந்த கண்ணாடி சில்லுகள் அவர் முகம் மற்றும் கைப் பகுதிகளில் காயங்களை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்