இளைஞரை துரத்தி துரத்தி கடித்த குரங்குகள்... பரவலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (15:31 IST)
மனித இனத்தின் முன்னோடிகள் என்றும் , குரங்கின் ஒரு பிரிவுதான் மனித என்றும், அப்படி விலங்காகப் பிரிந்து காலத்திற்கு ஏற்பப் பரிணாம வளர்ச்சி பெற்றதால்தான் நம் மனித சமுதாயம் இன்றைய அளவுக்கு அறிவில் முதிர்ச்சி பெற்றுள்ளதாகவும் அறிவியல் பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் விருந்தாவன் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிகுன்ஞ் கோயல். இவர் தனது நண்பரை பார்ப்பதற்க்காக அங்குள்ள ஒரு கடைக்குச் சென்றிருந்தார்.
 
பின்னர் கடைக்குத் திரும்பிய நிகுன்ஞ் கோயலிடம்,  உணவு இருக்கும் என்று நினைத்த குரங்குகள்.. அவரைச் சுற்றி வளைத்துக்கொண்டு, நகங்களால் கீறி, கடித்து வைத்தன... இதனையடுத்து அங்கிருந்து தப்பிச்சென்ற கோயல் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
 
கோயலை குரங்குகள் கடிக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்