3 ஆவது நிலைக்கு முன்னேறியது சந்திரயான் 2

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (12:29 IST)
சந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்று வட்டபாதையில் 3 ஆவது நிலைக்கு வெற்றிகரமாக முன்னேறியுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, சந்திரயான் 2 விண்கலம் ஜி எஸ் எல் வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திரயான் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்றுவட்டபாதையில் சேர்க்க திட்டமிடப்பட்டது. அதன் படி சந்திரயான் 2 திரவ என்ஜின் இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு மணி நேரம் இயக்கப்பட்டது.

அதில் சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் சேர்க்கப்பட்டது. இந்த முக்கியமான செயல்பாடு வெற்றிகரமாக அமைந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற 3 நிலைகளை கொண்ட இந்த விண்கலம், நிலவின் மூன்றாவது நிலைக்கு முன்னேறியுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி, அதிகாலை 1.55 மணியலவில் சந்திரயான் 2 நிலவில் தரையிறக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமிதமாக வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்