பெண்களுக்கு இலவச பேருந்து, மாத உதவித்தொகை! – திமுக வழியில் இறங்கிய சந்திரபாபு நாயுடு!

Webdunia
திங்கள், 29 மே 2023 (08:28 IST)
ஆந்திராவில் அடுத்த ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்ட தேர்தல் அறிவிப்புகளை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.



ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக உள்ளார். ஆந்திராவில் சட்டமன்ற ஆட்சிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
ஆந்திராவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வரும் முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, இப்போதிருந்தே மக்களை ஈர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு இப்போதே தனது முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. அதில் உள்ளூர், நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், 18 வயது பூர்த்தியடைந்த பெண்களுக்கு மாதம் ரூ.1500 உள்ளிட்ட பெண்களை ஈர்க்கும் பல வாக்குறுதிகளை அவர் வெளியிட்டுள்ளார்.

பெண்களுக்கு இலவச பயணம் மற்றும் மாத உதவித்தொகை அறிவிப்பு தமிழ்நாட்டில் திமுக வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதே அறிவிப்புகளை வெளியிட்டு காங்கிரஸ் சமீபத்தில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது. இதனால் இந்த அறிவிப்பு தெலுங்கு தேசம் கட்சியின் வெற்றிக்கு முதல் படியாக அமையலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்