ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்து விலகியதில் இருந்தே பாஜகவை வீழ்த்துவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். பாஜக வுக்கெ எதிரான கட்சியின் தலைவர்களை சந்தித்து அணித் திரட்டும் வேலைகளை செய்து வருகிறார். அது சம்மந்தமாக ராகுல் காந்தி, மு க ஸ்டாலின் போன்றோரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வருகின்ற மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது சம்மந்தமாக பாஜக அல்லாத எதிரணிகளை ஒன்றிணைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார். இன்று டெல்லியில் நடைபெறும் அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
இந்தக் கூட்டத்தால் பாஜக வுக்கு எதிரான மெகாக் கூட்டணி வாய்ப்பிருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர். ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்ட்சபைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.