காங்கிரஸா? பாஜகவா? தேர்தல் முடிந்த கையோடு வெற்றி கருத்து கணிப்பு வெளியீடு!

வெள்ளி, 7 டிசம்பர் 2018 (18:07 IST)
இன்று ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. சிறிது நேரத்திற்கு முன்னர் முடிவடைந்த தேர்தலில் வெற்றி யாருக்கு என்ற கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. 
 
தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் வெற்றி கருத்து கணிப்பை டைம்ஸ் நவ் மற்றும் இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. இவ்விரு கருத்து கணிப்புகளும் பின்வருமாறு, 
 
டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு: 
மத்திய பிரதேசம்: 
பாஜக: 126
காங்கிரஸ்:89
மற்றவை:15
மொத்தம்: 230 இடங்கள், பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை.
 
சத்தீஸ்கர்:
பாஜக: 46
காங்கிரஸ்: 35
மற்றவை: 9
மொத்தம்: 90 இடங்கள், பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை
 
ராஜஸ்தான்: 
பாஜக: 85
காங்கிரஸ்: 105
மற்றவை: 9
மொத்தம்: 199 இடங்கள், பெரும்பான்மைக்கு 100 இடங்கள் தேவை
 
தெலங்கானா: 
டிஆர்எஸ்: 66
பாஜக: 7
காங்கிரஸ்: 37
மொத்தம்: 119 இடங்கள், பெரும்பான்மைக்கு 60 இடங்கள் தேவை
 
இந்தியா டுடே மத்திய பிரதேச கருத்து கணிப்பு:
பாஜக: 102 - 120
காங்கிரஸ்: 104 - 122
மற்றவை: 0
மொத்தம்: 230 இடங்கள், பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை.
 
ஆக மொத்தம் தற்போதைக்கு வெளியாகியுள்ள கருத்து கணிப்பின்படி பாஜக மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் வெற்றி பெரும் எனவும், ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெரும் எனவும், தெலங்கானாவில் டிஆர்எஸ் வெற்றி பெரும் என்றும் தெரிகிறது. மிசோரம் தேர்தல் குறித்து எந்த கருத்து கணிப்பும் வெளியாகவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்