திருமலை பிரம்மோற்சவ விழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்களுக்காக, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், மற்றும் செங்கோட்டை ஆகிய நகரங்களிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும்.
அதேபோல், திருச்செந்தூர் மற்றும் குலசை கோயில்களில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் கோவையில் இருந்து அக்டோபர் மாதம் வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.