செங்கோட்டையன் - ஓபிஎஸ் திடீர் ஆலோசனை; அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி பலிக்குமா?

Siva

வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (08:31 IST)
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் குரல் கொடுத்த நிலையில், அவர் திடீரென கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், மீண்டும் அவர் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும், அதிமுகவை ஒருங்கிணைக்க என்ன செய்யலாம் என்பது தான் அந்த ஆலோசனை என்றும் கூறப்படுகிறது.
 
கட்சியிலிருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்று கூறி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாள் கெடு செங்கோட்டையன் கொடுத்திருந்த நிலையில், அந்த கெடு முடிந்துவிட்டதால் தற்போது அவர் அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே டிடிவி தினகரனை சந்தித்த செங்கோட்டையன், தற்போது ஓபிஎஸ் அவர்களையும் சந்தித்திருப்பதாகவும், இந்த சந்திப்பு 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்ததாகவும் தகவல் வெளியாகிறது. 
 
இதனை அடுத்து, அவர் சசிகலாவையும் சந்திக்க இருப்பதாகவும், அதன் பின்னர் அதிரடி அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்