சந்திரபாபுவுடன் கூட்டணி வைக்கும் பிரபல நடிகரின் கட்சி: திடீர் சந்திப்பால் பரபரப்பு

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (11:23 IST)
ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைக்க பிரபல நடிகரின் கட்சி முடிவு செய்துள்ளது. 
 
ஆந்திர மாநிலத்தில் பிரபல நடிகராக இருக்கும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி சேர இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சந்திரபாபு நாயுடுவை நடிகர் பவன் கல்யாண் நேற்று சந்தித்துப் பேசினார். இதனைஅடுத்து இந்த கூட்டணியை உறுதி செய்யப்பட்டுள்ளது
 
கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி யில் இருந்த ஜனசேனா கட்சி தற்போது திடீரென தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து செயல்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஆந்திர மாநிலத்தில் தற்போது 2024 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் வாக்கு பிரிந்து விடாமல் இருப்பதற்காக ஓரணியில் இணைய வேண்டும் என்று நாங்கள் ஆலோசித்தோம் என்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பின்  நடிகர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்