சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா தள்ளிவைப்பு.. காரணம் பிரதமர் மோடியா?

Mahendran

வியாழன், 6 ஜூன் 2024 (12:51 IST)
ஆந்திர முதல்வராக வரும் 12ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவியேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
முன்னதாக வரும் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வந்த புதிய தகவலின்படி அவர் 12ஆம் தேதி பதவியேற்கிறார்.
 
மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி 8ஆம் தேதி நடைபெற இருபப்தாக கூறப்படும் நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொள்ள உள்ளார். எனவே தான் அவரது பதவியேற்பு விழா தள்ளிவைப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் மட்டும் 134 இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் கூட்டணி ஆட்சி இல்லை என்பது உறுதி செய்துள்ளது. இருப்பினும் கூட்டணி கட்சிகளான ஜனசேனா 21 இடங்களையும் பாஜக 8 இடங்களையும் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்