மத்தியப் பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கருதப்படும் ஒருவர், ஐந்து வயது சிறுவனை அவன் தாயின் கண்முன்னே தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றவாளி, கிராம மக்களால் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த காலு சிங் என்பவரது வீட்டில், மகேஷ் என்ற இளைஞர் திடீரென பைக்கில் வந்துள்ளார். அந்த குடும்பத்திற்கு மகேஷை இதற்கு முன் தெரியாது. வீட்டிற்குள் நுழைந்த அவர், அங்கிருந்த மண்வெட்டி போன்ற கூர்மையான கருவியை எடுத்துக்கொண்டு, ஐந்து வயது சிறுவன் விகாஸை அவன் தாய் கண்முன்னே கொடூரமாக தாக்கி, சிறுவனி தலையைத் துண்டித்துள்ளார். அத்துடன் நிற்காமல், சிறுவனின் உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.
சிறுவனை காப்பாற்ற முயன்ற அவனது தாய், பலத்த காயமடைந்து அதிர்ச்சியில் உறைந்துபோனார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் ஓடிவந்துள்ளனர். அப்போது, ஆத்திரமடைந்த கிராம மக்கள் மகேஷை கடுமையாக தாக்கியுள்ளனர்.