மத்தியப் பிரதேசத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு இறைச்சி, மீன், மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நவராத்திரி திருவிழா தொடங்குவதை ஒட்டி, மத்திய பிரதேச மாநில அரசு, செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை போபால் மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகள், மற்றும் முட்டை விற்பனை நிலையங்களை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த திடீர் நடவடிக்கை, அசைவ உணவுகளை சார்ந்திருக்கும் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிலர், இது தனிநப உணவுப் பழக்கங்களில் தலையிடும் செயல் என்றும், மக்களுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்று அரசு உத்தரவிட உரிமை இல்லை என்றும் வாதிட்டுள்ளனர். அரசின் இந்த முடிவு, மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், சில குறிப்பிட்ட மதங்களின் நம்பிக்கைகளை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
அதே நேரத்தில், நவராத்திரி போன்ற இந்துக்களின் முக்கிய பண்டிகையின்போது, இந்த தடை உத்தரவு சரியானதே என்றும், இது பண்டிகையின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் என்றும் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.