பொது இடத்தில் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்: மோடியின் தூய்மை இந்தியா அபாரம்!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (14:06 IST)
மத்திய வேளாண்மை துறை அமைச்சர் பாஜகவை சேர்ந்த ராதா மோகன் சிங் பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சரின் இந்த செயல் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மத்தியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்ததும் முதலில் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் முதன்மையான ஒன்று தூய்மை இந்தியா திட்டம். நாடு முழுவதும் இந்த திட்டம் குறித்து பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் மேடைகள் தோறும் பேசினர்.
 
பிரதமர் மோடியே களத்தில் இறங்கி குப்பைகளை துடைப்பத்தால் தூய்மை செய்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். பல இடங்களில் அமைச்சர்கள் துடைப்பத்துடன் குப்பையை ஒதுக்குவது போல் புகைப்படங்கள் வந்தன. மேலும் சில இடங்களில் தூய்மையான இடத்தில் குப்பையை கொட்டி அதனை அமைச்சர் சுத்தம் செய்வது போல புகைப்படம் எடுத்தும் வெளியிட்ட சம்பவங்கள் நடந்தது.
 
இந்நிலையில் பாஜகவினர் மேடைதோறும் முழங்கும் மத்திய அரசு கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டத்தின் லட்சணம் இதுதானா என கேட்கும் விதமாக பாஜகவை சேர்ந்த மத்திய வேளாண் துறை அமைச்சரின் செயல்பாடு அமைந்துள்ளது.
 
தூய்மை இந்தியா திட்டத்தில் நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கு வேண்டிய மத்திய வேளாண் துறை அமைச்சர் ரதா மோகன் சிங் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன் பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்