தடுப்பூசி கையிருப்பு இல்லை? மாநில அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (09:12 IST)
கொரோனா பரவல் மீண்டும் உலகம் முழுவதும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

உலகம் முழுவதும் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது மீண்டும் வேகமாக அதிகரித்து வருவது பிற நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களில் சீனாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்துள்ளன. நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ALSO READ: வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதிய நிலையில், நேற்று உயர்நிலை குழுவுடன் பிரதமர் மோடி கொரோனா பரவல் குறித்து கலந்து ஆலோசித்தார்.

இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சமீபத்தில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என கூறியிருந்தார். இந்த கூட்டத்தில் மீண்டும் தடுப்பூசி இருப்பை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்