ஆசியாவில் அதிகரிக்கும் கொரோனா! – மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (09:30 IST)
ஆசிய நாடுகளான சீனா, தென் கொரியா போன்றவற்றில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதனால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வபோது கொரோனா பாதிப்புகள் குறைந்தாலும், புதிய வேரியண்டுகள் உருவாகி மேலும் பாதிப்பை அதிகரிக்க செய்து வருகின்றன.

சமீப காலமாக கொரோனா குறைந்து வரும் நிலையில் ஆசிய நாடுகளான சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளில் பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்