இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த தடுப்பூசியை பயன்படுத்தும் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு
உலகம் முழுவதும் கொரோனாவால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கினர்.
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான வெளிநாட்டு தடுப்பூசிகளை வாங்க திட்டமிட்டுள்ள நிலையில் அவசர காலத்திற்கு தங்கள் தடுப்பூசியை பயன்படுத்த வேண்டுமென சீரம் இன்ஸ்டிடியூட் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால் தேவையான பாதுகாப்பு மற்றும் தரவுகள் இல்லை என்பதால் அவர்களது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.