நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை நோக்கி வேகமாக சென்று கொண்டுள்ளது.
இந்த விலையேற்றத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் உற்பத்தி வரி அதிகரிக்கப்படுவதேக் காரணம் என சொல்லப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு இந்த உற்பத்தி வரி 3.56 ரூபாயாக இருந்த நிலையில் இப்போது 32.90 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு சுமார் 300 சதவீதம் அதிக வருவாய் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. நடப்பாண்டில் இதன் மூலம் மத்திய அரசு ஈட்டிய வருவாய் ரூ.2.95 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.