கோதுமை விலை உயர்வு; கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (08:45 IST)
இந்தியாவில் கோதுமை விலை உயரத் தொடங்கியுள்ள நிலையில் விலையை கட்டுப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலக அளவில் கோதுமை உற்பத்தியில் இந்தியா முக்கியமான இடத்தில் உள்ளது. கடந்த 6 மாத காலமாக உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் கோதுமை ஏற்றுமதி அதிகரித்தது. இதனால் கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருந்தது.

ஆனால் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தடை நீக்கப்பட்டது. இதனால் கோதுமை ஏற்றுமதி 200 சதவீதம் அதிகரித்தது. கோதுமை ஏற்றுமதி அதிகரித்ததால் உள்நாட்டில் கோதுமை மாவு தட்டுப்பாடு காரணமாக விலை கணிசமாக உயரத்தொடங்கியுள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் கோதுமை உள்நாட்டு விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்