அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் - மத்திய அமைச்சர் தகவல்

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (16:25 IST)
புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி யூனியனில், பாஜக கூட்டணியுடனான என்.ஆரர் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

இன்று அந்த மா நிலத்தில் நடந்த பாஜக கூட்டத்தில்,  கலந்துகொண்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அரசியலுக்காக மட்டும்தான் பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருவதாகக் கூறினார்.

மேலும், உள்ளூர் மொழி, வேலைவாய்ப்புகள், பன்முகத் தன்மை மற்றும் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை எதிர்க்கட்சியக்ள் எதற்காக எதிர்க்க வேண்டும்?

புதுச்சேரி அரசின் விருப்பத்தின்படி, அடுத்தாண்டில், புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சிபிஎஸ் இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்