கேள்வித்தாள்கள் லீக் ; இரு பாடங்களுக்கு மறுதேர்வு: சி.பி.எஸ்.ஐ அறிவிப்பு

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (17:37 IST)
கேள்வித்தாள்கள் வெளியான விவகாரத்தில் 12ம் வகுப்பு பொருளியல் மற்றும் 10ம் வகுப்பு கணிதம் என இரண்டு தேர்வுகளுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.ஐ அறிவித்துள்ளது.

 
சி.பி.எஸ்.ஐ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கியது. அந்நிலையில், 12ம் வகுப்பு பொருளியல் பாட தேர்வுக்கான வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் வெளியானதாக செய்தி பரவியது. ஆனால்,  அந்த செய்தியைஅ சி.பி.எஸ்.இ மறுத்து அறிக்கை வெளியிட்டது.  இந்நிலையில், இன்று நடைபெற்ற 10ம் வகுப்புக்கான கணிதத் தேர்வின்  வினாத்தாளும் லீக் ஆனது. 

 
இதைத்தொடர்ந்து இந்த இரண்டு பாடத்திற்கும் மறு தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.ஐ இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி அந்த தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்