காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது; கர்நாடக எம்.பி க்கள் டெல்லியில் போராட்டம்

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (11:38 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகத்தில் போராட்டம் நடந்து வரும் வேளையில், கர்நாடக காங்கிரஸ் எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கானது வரும் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தற்பொழுது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்