இந்த ஆய்வில், பிரிட்டானியா, ஹார்வெஸ்ட் கோல்ட், கே.எப்.சி., பீசா ஹட், டொமினோஸ், சப்வே, மெக்டொனால்டு, சிலைஸ் ஆப் இத்தாலி உள்ளிட்ட 38 நிறுவனங்களின் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ரொட்டி, பன் போன்றவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில், இந்த நிறுவனங்களின் ரொட்டி மற்றும் பன்களில் 84 சதவீத அளவிற்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ரசாயன பொருட்கள் என்று பட்டியலிடப்பட்ட பொட்டாசியம் புரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் போன்றவை இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பிரபல நிறுவனங்களின் ரொட்டிகளில் புற்று நோயை ஏற்படுத்தும் ரசயானம் இருப்பது தெரியவந்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இது குறித்து விசாரணை நடத்த மத்திய சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும், விரைவில் விசாரணை அறிக்கை வந்துவிடும் எனவும் கூறியுள்ளார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா.