பப்ஜியை மிஞ்சிய கால் ஆஃப் ட்யூட்டி! – அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவில் அதிகம்!

வெள்ளி, 26 ஜூன் 2020 (09:56 IST)
இந்தியாவில் இளைஞர்களிடையே பிரபலமாக இருக்கும் பப்ஜி கேமை அடுத்து மிக பிரபலமான கேமாக வந்துள்ளது ‘கால் ஆஃப் ட்யூட்டி’

ஆரம்ப கட்டத்தில் ஆண்ட்ராய்டு போன்கள் விற்பனை தொடங்கிய காலத்தில் கேண்டி க்ரஸ், டெம்பிள் ரன் போன்ற கேம்கள் மிக பிரபலமாக இருந்தன. நாள் போக்கில் ஸ்மார்ட் போன்களின் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக லைவ் ஆக்‌ஷன் 3டி கேம்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது இந்திய இளைஞர்களிடையே பப்ஜி விளையாட்டு மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இப்போது மீண்டும் இளைஞர்களிடையே பப்ஜியை தாண்டி ஒரு விளையாட்டு பிரபலமாகி வருகிறது. கால் ஆஃப் டியூட்டி என்ற இந்த கேம் பப்ஜி போலவே ஆன்லைன் மூலம் மற்ற நபர்களுடன் விளையாடும் கேமாக உள்ளது. கடந்த மாதம் ஆகஸ்டில் வெளியான இந்த கேமை இதுவரை 25 கோடிக்கும் அதிகமானோர் தரவிறக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு பிறகு இந்தியாவில் இந்த கேம் மிகவும் பிரபலமடைந்துள்ளது.

கடந்த ஓராண்டில் பப்ஜி கேம் 23.5 கோடி பேராலும், கால் ஆஃப் டியூட்டி 25 கோடி பேராலும்  டௌன்லோட் செய்யப்பட்டுள்ளது என சென்சார் டவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்