உலக கொரோனா பாதிப்பு 97 லட்சம்: தினமும் 2 லட்சம் உயர்வதால் பரபரப்பு

வெள்ளி, 26 ஜூன் 2020 (06:29 IST)
உலகில் 96.99 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் உலக நாடுகள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளன. தினமும் சராசரியாக சுமார் 2 லட்சம் பேர் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் உலகில் கொரோனாவில் இருந்து 52,51,111 குணம் அடைந்தனர் என்பதும், உலகில் கொரோனா பாதிப்புடன் 39,57,531 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 4,90,933 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் அதிர்ச்சிக்குரிய ஒரு தகவல் ஆகும்
 
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் கொரோனாவால்  5,124 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக பிரேசிலில் மிக அதிகபட்சமாக 1,180 பேர் பலியாகியுள்ளதாகவும், மெக்ஸிகோவில் 947 பேர் பலியாகியுள்ளதாகவும், அமெரிக்காவில் 595 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்தியாவில் 401 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பிரேசிலில் 40,673 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,907 பேருக்கும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,185 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது;
 
கொரோனா பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், பெரு, சிலி, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய 10 நாடுகள் முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்