கூகுள் இணையதளத்தைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு எண்ணற்ற வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது கூகுள். இந்நிலையில், செல்போன் மூலமாக கூகுள் பே செயல் பட்டுவந்த நிலையில் அது அங்கீகரிக்கப்படாதது என்று செய்திகள் பரவியது.
கூகுள் பே மூலம் செயல்படும் அனைத்து பணப் பரிவர்த்தனைகளும், ரிசர்வ் வங்கி தேசியப் பணப்பட்டுவாடா கழகத்தின் வழிகாட்டுதல்களின்படி பாதுக்காப்பாகவும், முறையாகவும் செயப்பட்டுவருதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் முழுமையாக சட்டத்திற்கு உட்பட்டுத்தான் கூகுள் பே இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.