இந்நிலையில் சாகாரம் லோஹர், தனது மனைவியை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள கோவிக்குச் சென்றுள்ளார். அங்கு சென்று வந்ததும் அவருக்கு மதுபானம் குடிக்கவேண்டும் என ஆசை வந்துள்ளது. அதை தன் மனைவியிடமும் கூறியுள்ளார்.
அதற்கு சனாமதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சாகரம் மனைவி கையில் வைத்திருந்த குழந்தையை பிடுங்கி, அருகில் இருந்த 2 பேரிடம் ரூ. 1000க்கு விலை பேசி விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து தனது மனைவி கேட்டதற்கு சாகரம் அவரை கடுமையாக தாக்கியுள்ளதாகத் தெரிகிறது.