மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

Prasanth Karthick

ஞாயிறு, 4 மே 2025 (15:31 IST)

சமீபத்தில் மதுரை ஆதீனம் சென்ற கார் விபத்தான நிலையில் அதுகுறித்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

 

மதுரை ஆதீனம் சமீபத்தில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை அருகே அவரது கார் மற்றொரு காருடன் மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து பேட்டியளித்த ஆதீனம் உளுந்தூர்பேட்டையில் நடந்த விபத்து தீவிரவாத தாக்குதல் எனவும், அதில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதாகவும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதுத்தொடர்பாக, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், விபத்து நடந்த பகுதியில் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்துள்ளனர். அதில் ஆதீனம் பயணித்த கார் அதிவேகமாக சென்று சாலையை கடந்தபோது விபத்திற்குள்ளானது தெரியவந்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்