பட்ஜெட் கூட்டத்தொடர்: பணமதிப்பிழப்பிற்கான நடவடிக்கை என்ன??

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2017 (10:41 IST)
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 2017 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றவுள்ளார். 


 
 
இதைத்தொடர்ந்து நாளை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி  பட்ஜட் தாக்கல் செய்யவுள்ளார். இதுவரை தனியாகவே தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட் இந்த ஆண்டு முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் தாக்கல் செய்யப்படவுள்ளது.
 
பிரதமர் மோடியில் பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் பல்வேறு தரப்பினரும் பெரும் அவதியடைந்தனர். இந்நிலையில் இன்று தொடங்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதனை சரிகட்டும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சிறப்பு அம்சங்கள்:
 
# விவசாயம் மற்றும் உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள், சிறுகுறு தொழில்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. 
 
# வருமான வரிவிலக்கு உச்சவரம்பு 2 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
# ஏற்கனவே பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆறுதலாக வருமான வரிவிலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. 
 
# வீட்டுக்கடன், தொழிற்கடன் உள்ளிட்டவற்றிற்கும் வரிச்சலுகை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்