கோழிகளால் கொரோனா பரவுவதாக சமூக வலைதளங்களில் வெளியான புரளியை தொடர்ந்து கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிருடன் புதைக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் மக்கள் தீவிர அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கோழி உள்ளிட்ட மாமிசங்கள் மூலமாக கொரோனா பரவுவதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தன. ஆனால் அதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் கர்நாடகாவில் பெலகாவி பகுதியில் கொரோனா பீதியினால் பிராய்லர் கோழிகளை ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து, பெரிய குழி தோண்டி உயிருடன் புதைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பலர் இந்த செயலுக்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.