தனித்தனியாக ஓடிப்போன மணமகளும், மணமகனும்: பெரும் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (00:57 IST)
திருமண வீட்டில் திருமணம் பிடிக்காததால் மணமகன் அல்லது மணமகள் ஆகிய இருவரில் ஒருவர் ஓடிப்போவது குறித்த செய்தியை இதுவரை பலமுறை பார்த்துள்ளோம். ஆனால் கர்நாடக மாநிலத்தில் நடக்கவிருந்த திருமணம் ஒன்றில், திருமணத்திற்கு முன் மணமகள், மணமகன் இருவருமே தனித்தனியாக ஓடிப்போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடக மாநிலத்தில் உள்ள மலூர் என்ற கிராமத்தின் மாற்றுத்திறனாளி குரேஷ் என்பவருக்க்கும் அதே பகுதியை சேர்ந்த செளமியா என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கடந்த சனிக்கிழமை நிச்சயதார்த்தம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருந்த நிலையில் திடீரென மணமகள் செளம்யா மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டாரை சமாதானப்படுத்திய பெண் வீட்டார், செளமியாவின் உறவுப்பெண்ணான வெங்கடரத்னம்மா என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் குரேஷிக்கும் வெங்கடரத்னம்மாவுக்கும் சனிக்கிழமை இரவு நிச்சயதார்த்தமும், வரவேற்பும் நடந்தது. ஆனால் ஞாயிறு காலை திருமணத்திற்கு சில மணி நேரம் முன்பு மணமகன் குரேஷி திடீரென மாயமானார். இதனால் இரு வீட்டார்களும் சோகத்தில் முழ்கினர். இருதரப்பிலும் தவறு இருந்ததால் போலீசாரிடம் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்