முதலிரவு முடிந்தவுடன் நகைகளுடன் மணமகள் ஓட்டம்.. 12க்கும் மேற்பட்ட மணமகன்களை ஏமாற்றிய கும்பல்..!

Siva

செவ்வாய், 14 அக்டோபர் 2025 (08:20 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், ஒரு திருமண மோசடி கும்பலால் 12க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். திருமணம் முடிந்து மறுநாள் காலையில், தங்கள் புதுமண பெண்கள் நகைகள் மற்றும் ரொக்கப் பணத்துடன் மாயமானதைக் கண்டு மணமகன்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 
இந்த கும்பல், மணமகன்களுடன் ஒரு நாள் இரவு தங்கிவிட்டு, திட்டமிட்டு கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. முகேஷ் குப்தா என்ற உள்ளூர் நபரின் தலைமையில் இந்த கும்பல் செயல்படுவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு திருமணத்திற்கும் மணமகன்களிடமிருந்து தலா ரூ. 1.25 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
 
சமூக ஊடகங்கள் மூலம் கவர்ச்சிகரமான மணப்பெண்கள் குறைந்த செலவில் கிடைப்பதாக இளைஞர்களை குறிவைத்து, கார்வா சௌத் போன்ற நாட்களில் அவசரமாக திருமணங்கள் நடத்தப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவமானத்திற்கு அஞ்சி பலர் புகார் அளிக்கத் தயங்குவதாகவும் தெரிகிறது.
 
காவல்துறையினர் இந்த போலி திருமண கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்